குழந்தைகளை
எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும்
குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை
பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை
பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.




சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?

டயப்பர்
கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை
துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம்
துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து
சுத்தமாக்குங்கள்.



டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது.
சிலவகை டயப்பர்கள்
குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதை கட்டியிருக்கும் சருமப்
பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த
வேண்டாம்.



டயப்பர்
இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும்.
கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால்
அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.




சருமத்தில்
சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயின்மென்ட்
பயன்படுத்தலாம். நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது
நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள்.



வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.