குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

2 posters

Go down

டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

Post by Admin Thu Mar 14, 2013 11:34 pm

பழங்கால இந்தியாவில்செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது,தூங்குவது மாதிரி அதுவும்ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப்பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக
மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும்திருமண வாழ்க்கை இந்த உறவில்தான்
முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப்புரிந்திருந்தது.


இல்லறத்தில் ஆண்,பெண் இடையே இருக்கும்உறவு, ஒளிவு மறைவில்லாதது.அன்பு செலுத்துவது, உண்மையாகஇருப்பது, மரியாதை
தருவதுஎன எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது
இருவரின்தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர்
ரிஷிகள்.
பெண் என்பவகள் ஆணுக்கு
படுக்கையில் சந்தோஷம்தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில்
சுகம் தேடும் உரிமை அவளுக்கும்இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில்
அவகள் திருமண உறவுக்கு வெளியில்அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால்
குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும்பிரச்னைகள் உருவாகும்
என்பது அந்தரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள்சொன்ன நீதி... இந்த உறவில்கொடுப்பவர், எடுப்பவர் என்றவித்தியாசம் இல்லை!நமது
ரிஷிகள்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை
நாற்பதுவருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய
நாகரிகம்புரிந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையின்முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரியகவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்குஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தைநமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்துமீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரியஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பானசிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர்.மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற
ஜாக்கிரதைஉணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின்
மூலம் உலகளவில்புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.


இந்தத் தொடரைப்படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவேபாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும்,அதுபற்றி முழுமையாகத்தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒருபெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட
வைக்கும்ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது
சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம்
முறை பலபேர் வந்து பரவசமானகலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற
பெருமையை அது பெற்றது.


தங்கள் காதல்மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்தடீன்ஏஜ் காதலர்கள், தனியாகஅறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத்தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள்உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லைஎன்றுநிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்குஜோடியே தேவையில்லைஎன்ற
படி தனிஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான
மனிதர்களை அந்தஅறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.


வெளிச்சம்,இருட்டு
என்ற வித்தியாசம்எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு
நேரங்களில் விதம்விதமானஉணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன.
படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம்தராமல்
, அடுத்தடுத்துபத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியானஅந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் தேனிலவு சூட்அல்லது ஏதாவதுகுளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள்நினைத்தீர்கள்.

ஸாரி... அதுதப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக்கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையைஅனுபவித்தது, ஓர்ஆராய்ச்சிக்காக!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன்
பல்கலைக்கழகத்தின்மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும்
பெண்கள்நலப் பிரிவில்தான்நடந்தது இந்த ஆராய்ச்சி.


இதில் போய் என்னஆராய்ச்சி!என முகத்தைச்சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்தபாராவுக்கு போங்கள்.

இந்தவித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... இருண்ட கண்டம்என
பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்தஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம்
அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோதொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக்
கொண்டிருக்கும் நட்சத்திரங்களை

வகைப்படுத்திபெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின்அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள்நிகழ்கின்றன? ஒட்டுமொத்தஉடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளைஉலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது?பிரபஞ்சத்தைசிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்தஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பதுவெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்? இந்த உறவில்பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன?பலபேருக்கு குழந்தைப்பேறுஇல்லாமல் போவதற்கு என்ன காரணம்?
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

Post by Admin Thu Mar 14, 2013 11:36 pm

இப்படி எத்தனையோகேகள்விகள். ஒரு
பெண்ணின் அந்தரங்கபாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர்
போக ஒரு துவாரம்...அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை
பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்...சரியாகக் கணிக்காமல் உறவின்போது
துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவுகொகள்ளும் ஆணுக்கு மர்மமான
வியாதிகள் வரும்
என்றெல்லாம்கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதியஅந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று பிஸியாலஜிஉடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது பேதாலஜிநோய்
வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது...
செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த
நோய் குண அறிவியல்.இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு
கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய்
ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத
பட்சத்தில்..
?

பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை.அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று செக்ஸாலஜிஎன்ற
பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது.
இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல்
, முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களைக் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

ஒரு காலத்தில் மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான்இருக்கிறதுஎன்று உலகம் முழுக்கஎல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. விதையில்எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதைபொய்த்துப் போகிறதுஎன்று இதை நாசூக்காகசொன்னார்கள்.

அரியணைக்குவாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக மலடிபட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு
தங்கள் தலையைக் கொடுத்த பரிதாபசம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு
வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னைமகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது
புரியாவிட்டாலும்
, அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும்மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக்காப்பாற்றிக்கொகள்ள, யாருடனாவது சேர்ந்துதப்பு செய்து இளவரசனைப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்பபுரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்துவிடுவான்.
ஆனால், சராசரி
குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள்.குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான
மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சைஅவர்களுக்குத் தீர்வு
தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.


ஐம்பதாண்டுகளுக்குமுன்
நடந்த "படுக்கை அறை" ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்குதிறவுகோலாக
அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள்
விவாகரத்துமூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள்
மலடிஎன்ற
பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்துஅம்மா வீட்டில் காலம் முழுக்கக்
கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தானபுண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு
உண்டு.


அந்தப் படுக்கைஅறை இரண்டு
தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான
படுக்கை.அதற்குகள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள்
சன்கன்ட்ரோல்ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க
, அதற்கு வெளியேஇருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உகள்ளே இருக்கும் ஜோடிக்குஇந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.

உள்ளே நுழையும்ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களதுநாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தைஅளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும்மாற்றங்களை அளக்க எலெக்ட்ரோ என்ஸஃபைலோகிராம்எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட்டர்என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி...இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன.இவற்றை சுகமான சுமைகளாககருதியபடிஅவர்கள் இயல்பாகத் தங்களுக்குகள் கலந்தார்கள்.

மற்றஉறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்குஅத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது? ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன.அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும்மாற்றங்கள்? அதைக்
கண்காணிக்கவும் ஒருஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத்
தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாகபிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும்
வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன்உகள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது.
அந்த செயற்கை உறுப்பை வைத்து சிலபெண்கள் சுய இன்பம் அனுபவிக்க
, அதற்குகள் இருந்தகாமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும்பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.

மிகச் சாதாரணமானஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? ‘அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்என பலர் கூக்குரல் எழுப்ப, மத
அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில்குதித்தன. கொஞ்சம் தடம்
புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேகள்விக்குறி ஆகும்நிலை உண்டானது.


ஆனாலும்ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்துமுடித்தார், வில்லியம் ஹோவெல்மாஸ்டர்ஸ்.

சரி... எப்படிஇத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

Post by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

அருமை...
ராகவா
ராகவா

Posts : 16
Join date : 06/03/2014
Age : 53
Location : தஞ்சை மாவட்டம்

Back to top Go down

டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum