குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

கோதுமை- பயனுள்ள உணவு

Go down

கோதுமை- பயனுள்ள உணவு Empty கோதுமை- பயனுள்ள உணவு

Post by Admin Sat Feb 16, 2013 12:01 pm

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர்
வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா,
தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை
கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை
பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு
16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை
பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.

ஒரு
கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான்
மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி
அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த
பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான்
ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது
முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும்
ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின்
உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும்
ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது. முழுவதும் எடுத்தபிறகு
சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும்
இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும்
மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை
செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன்
ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம். துடப்பகுச்சி
மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு
பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம்
நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல்
மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில்
கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான்.
ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு
தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து
பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன்
மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா
வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும்
ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த
வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம்
கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன்
மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும்
மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum