குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும். . .

Go down

அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும். . . Empty அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும். . .

Post by Admin Sun Mar 17, 2013 9:16 pm

நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி
உள்ளது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய
காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி
அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும்
உள்ளன. உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது.
அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு
மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன்
பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத்
தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு
இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. குழந்தை குள்ளமாக இருப்பதோடு
அறிவுத் திறனும் குறைந்துவிடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை,
மந்தமான போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள்
"க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அயோடின் சத்து
பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில்
வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு
அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி
மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப்
பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில்
இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

அயோடின்
சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச்
சொல்லப்படும் விஷயம். ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை
இன்னும் பலர் உணரவில்லை. அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை
இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி
இருக்காது. பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல்,
மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.


மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த
குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அயோடின்
பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச்
சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின்
தேவைப்படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால்
போதுமானது. ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை
கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே
இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.


வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு
கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு
நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

அயொடின் என்றால் என்ன?
அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல்
கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு
வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின்
எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

சூரிய குடும்பத்திலேயே இது ஓர்
அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது
புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114
°C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப்
போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர். இதன் உப்புக்கள்
நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து
டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி
தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும்
படுகிறது. இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின்
அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட
காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப்
பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்
சின்ன குழந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள அயொடின் 25 மைக்ரோ கிராம்
100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]
Age..........................Male.................Female...........Pregnancy........Lactation
Birth to 6 months......110 mcg*..........110 mcg*
7–12 months.............130 mcg*..........130 mcg*
1–3 years..................90 mcg..............90 mcg
4–8 years..................90 mcg..............90 mcg
9–13 years...............120 mcg.............120 mcg
14–18 years.............150 mcg.............150 mcg.............220 mcg............290 mcg
19+ years.................150 mcg.............150 mcg............220 mcg.............290 mcg

Table 2: Selected Food Sources of Iodine
Food.............................Appr.mcg per serving............Percent DV*
Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ...............11% to 1,989%
Cod, baked, 3 ounces..................99 .............................66%
Yogurt, plain, low-fat, 1 cup............75 ............................50%
Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...................47%
Milk, reduced fat, 1 cup..................56 .............................37%
Fish sticks, 3 ounces......................54 ..............................36%
Bread, white, enriched, 2 slices.........45 ...........................30%
Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42............28%
Shrimp, 3 ounces.........................35 ................................23%
Ice cream, chocolate, 1/2 cup .........30 .............................20%
Macaroni, enriched, boiled, 1 cup......27............................18%
Egg, 1 large ..............................24 ..................................16%
Tuna, canned in oil, drained, 3 ounces...17 .......................11%
Corn, cream style, canned, 1/2 cup....14 ............................9%
Prunes, dried, 5 prunes...................13 ...............................9%
Cheese, cheddar, 1 ounce................12 ..............................8%
Raisin bran cereal, 1 cup..................11 ..............................7%
Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ............................5%
Apple juice, 1 cup..........................7 .................................5%
Green peas, frozen, boiled, 1/2 cup....3 ..............................2%
Banana, 1 medium........................3 .....................................2%

அயொடின் பாதிப்பால்...!


உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக் கழலை (goiter)என்ற நோய்
வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும்
நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின்
போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு
அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அதே போல உலகம் முழுவதும்
50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை
என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது.
கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட,
குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல்
திறனையும் அழிக்கிறது..

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு
தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான் உயிருக்கு உயிரான முக்கிய கனிமம்.
ஆனால் பூமியில் கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும், அதிக கனமானதும்
இதுதான்.

ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும்
உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும்
மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை
வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில்
பாதுகாக்கவும் உதவுகிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின்
ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு
நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen)
குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இது
இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின்
நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச்
செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ
குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம்
உற்பத்தியாகி கடலில் பரவிக்கிடக்கிறது.


[You must be registered and logged in to see this image.]
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum