குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

முல்லா கதைகள்!

Go down

முல்லா கதைகள்! Empty முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:24 am

மீன்!

ஒரு தடவை
அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை
கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர்
முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு
பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற
எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும்
நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச்
சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச்
சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார்
சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும்
ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய
தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு
பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன்
முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில்
போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி
முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து
கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத
ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக
அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப்
படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன
செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால்
சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள்
உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில்
வைத்தார் முல்லா.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:24 am

அதிர்ஷ்டமான மனிதன்!

முல்லாவும்
அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்
வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

முல்லா என்ன
சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார்.
தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா.
துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.

காலையில்
எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு
போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த
சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.

‘இல்லை.
நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட
அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால்,
உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:25 am

தளபதியின் சமரசம்!

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா
இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு
இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத்
தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு.
ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி
வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை
அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக்
கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே,
கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ?
என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட
வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட
யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத்
தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம்
இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர்
அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்
என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:25 am

முல்லா ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:25 am

எந்த வீட்டுக்குப் போவது?

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது

பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.

முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட
பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே
அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக
முடிந்த மகிழ்ச்சியில்” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு
நான் போவது?” என்று கேட்டார்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:25 am

சொல்லாதே!

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது. இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர்.
முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது.
உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர்,
“முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார்.

“அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

“ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர் என்றும், தத்துவஞானி என்றும் புகழ்கின்றனர்.
அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?
இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

“உம்மிடம் சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இந்த ரகசியத்தைக் கூறினால்
நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்!” என்றார் முல்லா.

“அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

“கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?” என்று கேட்டார் முல்லா.

“சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,
நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

“எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவது, நான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.

“கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டேன்,”
என்றார் முல்லாவின் நண்பர்.

“நண்பரே!
நானும் உங்களைப் போலத்தான். ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள்
எவ்வளவு கவனமாக இருக்கிறீர்களோ, அப்படித்தான் நானும். கோடி கோடியாகப்
பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்கு எந்த
சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்” என்றார் முல்லா.

வெறுத்துப் போனார் முல்லாவின் நண்பர்.

நன்றி: தினமலர்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:26 am

கர்ப்பிணிப் பானை!

ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை
கடனாகக் கேட்டார் முல்லா.

பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க
மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது.
நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச்
சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை
பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக
பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.

அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி
மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை
புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம்
கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை
கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை
கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை
திருப்பிக் கேட்டார் அவர்.

“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை
மகப்பேறின் போது மரித்து விட்டது” என்றார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.

‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய்.
பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும்
தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.

‘நண்பரே!
பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே
முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள்
கூட இருக்கிறதே குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை
உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய
முடியாது. நீங்கள் அதை நன்கு போஷித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச்
சொன்னார் முல்லா.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:26 am

முல்லா பேசிய பேச்சு

முல்லா வசித்து வந்த ஊரில் பெரும்பாலான மக்கள் முல்லாவை ஓர் அறிஞர் என்றும்
உலக அனுபவம் மிக்கவர் என்றும் மதித்து அவரைப் பாராட்டினர்.

அதே ஊரில் முல்லாவுக்கு இருக்கும் மதிப்பு மரியாதையைக் கண்டு எரிச்சலடைந்த சிலரும் இருந்தார்கள்.

"முல்லாவுக்கு அறிவாற்றல் ஏதும் கிடையாது. அவருக்கு மிகச் சாதாரண விஷயங்களில் கூட ஞானம் இல்லை.
அறிவுகெட்ட மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்" என்று அவர்கள் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

முல்லாவை ஒரு பெருங் கூட்டத்திற்குப் பேச அழைத்து அவரால் பதில் சொல்ல இயலாத கஷ்டமான வினாக்களை எழுப்பி
அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும்போது கை கொட்டிச் சிரிக்க வேண்டும் என்று அந்தப் பொறாமைக்காரர்கள் திட்டமிட்டார்கள்.

அவர்கள் ஒரு நாள் முல்லாவிடம் சென்று, "முல்லா அவர்களே! தங்களுடைய அரிய உபதேசங்களைக் கேட்டு
இன்புற வேண்டும் என்று எங்கள் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். ஒரு தடவை தாங்கள் வந்து எங்களுக்கெல்லாம்
அறிவுரை கூற வேண்டும்" என்று கேட்டனர்.

அவர்களுடைய சூழ்ச்சியினை விளங்கிக் கொண்ட முல்லா முதலில் அவர்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து
"எனக்கு ஓய்வே இல்லை. ஓய்வு கிடைத்தால் வருகிறேன்" என்றார்.

பொறாமைக்காரர்களோ திரும்பத் திரும்ப வந்து வற்புறுத்தினார்கள்.

அவர்கள் வேண்டுகோளை ஒரேயடியாகப் புறக்கணித்தால், தன்னைப் பற்றிக் கேவலமாகப் பிரச்சாரம் செய்வார்கள்
என்று கருதிய முல்லா ஒரு தடவை அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட நாளில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

எதிர்ப்பாளர்கள் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

முல்லாவிடம் தாறுமாறாகக் கேள்விகளைக் கேட்பதற்கென்றே சில குழப்பவாதிகளை அவர்கள் கூட்டத்திற்கு அழைத்து வந்து
உட்கார வைத்திருந்தார்கள்.

முல்லா குறித்த் நேரத்தில் கூட்டத்திற்கு வந்தார்.

கம்பீரமாக மேடை மீது ஏறி, "அன்பார்ந்த தோழர்களே! இன்று இங்கு நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி
உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார் முல்லா.

"எங்களுக்குத் தெரியாது" எனக் கூட்டத்திலிருந்தவர்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

"நான் என்ன பேசப் போகிறேன் என்பதைக் கூடத் தெரிந்து வைத்திராத அப்பாவிகளுக்கு மத்தியிலே நான் என்ன பேசினாலும்
விளங்காது. நான் வருகிறேன்" என்று கூறியவாறு முல்லா மேடையை விட்டு இறங்கிச் சென்று விட்டார்.

முல்லா தந்திரமாகச் சமாளித்துச் சென்று விட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்த எதிர்ப்பாளர்கள் சும்மா இருந்து விடவில்லை.

திரும்பத் திரும்ப முல்லாவின் வீட்டுக்குச் சென்று கூட்டத்திற்குள் வருமாறு வற்புறுத்தினார்கள்.

அவர்களுடைய நச்சரிப்புத் தாளமாட்டாமல் இரண்டாவது முறையாகக் கூட்டத்திற்குச் சென்றார் முல்லா.

மேடை ஏறியதும், "அன்பார்ந்த நண்பர்களே! இப்போது இங்கே நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி
உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று முல்லா மக்களைப் பார்த்துக் கேட்டார்.

"எங்களுக்குத் தெரியும்" என்று கூட்டத்தினர் பதிலளித்தனர்.

"நான் என்ன பேச இருக்கிறேன் என்பது முன்னதாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும்போது,
மறுபடியும் எதற்காக நான் பேச வேண்டும்!" என்று கூறிவிட்டு முல்லா புறப்பட்டுச் சென்று விட்டார்.

இரண்டாவது தடவையும் முல்லா ஏமாற்றிச் சென்று விட்டதைக் கண்ட எதிர்ப்பாளர்கள் மூன்றாவது தடவை
எப்படியாவது முல்லாவை அழைத்து வந்து திட்டமிட்டு அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுவது என்று முடிவு கட்டினார்கள்.

மூன்றாவது தடவையும் முல்லாவிடம் சென்று அவரை வற்புறுத்திக் கூட்டத்தில் பேச அவருடைய அனுமதியை வாங்கி விட்டார்கள்.

மூன்றாவது தடவையாக முல்லா மக்கள் முன்னால் மேடையில் ஏறி நின்றார்.

"அன்பார்ந்த மக்களே! இங்கே நான் என்ன பேசப் போகிறேன் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
என்று முல்லா வழக்கமான தனது கேள்வியைக் கேட்டார்.

"எங்களில் பாதிப் பேருக்கு நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பது பற்றித் தெரியும். பாதிப் பேருக்குத் தெரியாது"
என்று மக்கள் சாமர்த்தியமாகப் பதில் சொன்னார்கள்.

"அப்படியா? மிக்க மகிழ்ச்சி. நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரிந்து வைத்திருக்கும் மக்கள்
தெரியாதவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லி விடுங்கள். நான் எதற்காக வீணாகப் பேச வேண்டும்"
என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்று விட்டார்.

மூன்றாவது முறையும் மிகச் சாதுரியமாகப் பேசி முல்லா தங்களை ஏமாற்றி விட்டதைக் கண்ட அந்த மக்கள் வெட்கமடைந்தார்கள்.

அதற்குப் பிறகு முல்லாவின் விஷயத்தில் எதிர்ப்புக் காண்பிப்பதை அவர்கள் அறவே விட்டு விட்டு
மற்ற எல்லோரையும் போலவே முல்லாவைப் புகழத் தொடங்கினார்கள்
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:26 am

குழப்பவாதிகள்

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள்,
எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக
குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும்
முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார்.
பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ?
இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா,
அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிரூபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்"
என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன்.
அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா,
" அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு,
இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.
யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?
இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார்.
அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:26 am

தலைவா என்னை மன்னித்து விடுங்கள்

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய
சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில்
முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும்
அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
"ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:27 am

சொன்ன சொல் மாறாதவர்!

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் முல்லா அவர்களே தங்களது வயது என்ன? என்று கேட்டார்.

நாற்பது
வயது என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக என்ன
முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும்
உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து
ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே * அது எப்படி?
என்று கேட்டார்.

நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை
மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது என்று சிரித்துக் கொண்டே
கூறினார் முல்லா.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:27 am

கப்பலில் வேலை!

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர்?” என்று.

அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன்” என்று.

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர்?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்” என்றார் அவர்.

இப்படி அது சென்று கொண்டு இருந்தது.

“…பத்தாவது புயல்!”

நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.”

அந்த மனிதர் கேட்டார். “ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர்?” என்று

அதற்கு நஸ்ருதின் சொன்னார். “தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான்.”
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:27 am

சந்தேகப்பிராணி!

வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்குத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது.

அந்தப் பெரிய நகரத்தைப் பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.

சந்து
பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில்
மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்?
தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன்,
மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான்
இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.

அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்று தங்கினார்.

அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள்.

காலையில்
நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா
அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் சந்தேகப்
பிராணி.

முல்லா சிரித்துக் கொண்டே நண்பரே கவலைப்படாதீர். ஒரு
கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி
எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான்
அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றார்.

சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

அவனுக்கு
அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த
கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார்.

ஐயோ
நான் காணாமல் போய் விட்டேனே. என் காலில் இருந்த துணியைக் காணோமே என்று
கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு நான்
அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் என்று சத்தம் போட்டான்.

அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார்.

சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.

பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:27 am

கீழே விழுந்த சட்டை!

ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள்.

கீழே
விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு
ஒன்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.

ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார்.

அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Admin Fri Mar 15, 2013 11:27 am

கழுதையால் கிடைத்த பாடம்!

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.

முல்லா
அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து
இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன்
என்றார் நண்பர்.

அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல்
வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத்
தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.

அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார்.

நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.

நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.

முல்லா
அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்
கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்ற நண்பர் வியப்புடன் கேட்டார்.

முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது.

நான்
சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர்.
என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது
என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன்
என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

முல்லா கதைகள்! Empty Re: முல்லா கதைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum