குழந்தையின் ஆரோக்கியத்தில் சுகாதாரத்திற்கும்
முக்கிய பங்குண்டு. குழந்தை உபயோகப்படுத்தும் பொருட்கள், ஆடைகள், அவர்கள்
உறங்கும் இடம் என அனைத்திலுமே சுகாதாரமாக இருக்கவேண்டும். முக்கியமாக
குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுத்தால் அவற்றை மிகவும் சுத்தமாகவும்,
சுகாதாரமாகவும் பாதுகாக்கவேண்டும். பால் பாட்டில்களை கையாளும் முறை
குறித்து குழந்தை நல மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

சுடுநீரில் கழுவுங்கள்

கடையில் இருந்து பால் பாட்டிலை வாங்கி வந்த உடனே சுடுநீரில் அவற்றை நன்றாக
கழுவ வேண்டும். நிப்பில், பாட்டில் போன்றவைகளை 5 நிமிடம் வரை சுடுநீரில்
ஊறவைக்கவும். அப்பொழுதுதான் நுண் கிருமிகள் எதுவும் இல்லாமல் இருக்கும்.

பாலை பாட்டிலில் வைக்காதீர்கள்

குழந்தையின் வயிறு மெதுவாகத்தான் பெரிதாகும். அவை தாய்ப்பால் குடிக்கும்
அளவிற்கு மட்டுமே உள்ள இடம். அந்த அளவிற்கு ஏற்பதான் பாட்டிலில் பால்
ஊற்றவேண்டும். அதை விடுத்து அதிக அளவிற்கு ஊற்றினால் குழந்தையால் குடிக்க
முடியாது மிச்சம் வைத்துவிடும். அந்த பாலை அப்படியே பாட்டிலில் ஸ்டாக்
வைக்காதீர்கள். அதை சுத்தம் செய்துவிட்டு பாட்டிலையும் கழுவி விடுங்கள்.
இல்லையெனில் பாக்டீரியாக குடியேறிவிடும். முக்கியமாக

காய்ச்சிய பாலை எப்போதும் பாட்டிலில் ஊற்றி வைக்காதீர்கள் உலர்வாக வைத்திருங்கள்

குழந்தையில் பால் பாட்டிலை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள். ஏனெனில் ஈரமான
பாட்டிலில் கிருமிகள் குடியேறும். கூடுமானவரை உலர்வான இடத்தில் தனியாக
பாட்டிலை வைத்திருங்கள்.

பாட்டிலை கழுவுவதற்கு என தனியாக உள்ள பிரஸ் பயன்படுத்துங்கள். அதேபோல்
நிப்பிலையும் நன்றாக தேய்த்து கழுவுங்கள். பாட்டிலையும், நிப்பிலையும்
தனித்தனியாக கழற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.

பாக்டீரியா கவனம்

பால் பாட்டிலை இந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே அதில் பால்
குடிக்கும் குழந்தைகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாமல் இருக்கும்.
இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்பட
வாய்ப்புள்ளது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில் பால் அவசியமில்லை. அதையும்
மீறி பசும்பால் கொடுக்க விரும்பினால், சங்கிலோ, அல்லது சிறிய டம்ளரிலோ
கொடுத்து பழக்கலாம். அதுதான் ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் குழந்தை நல
மருத்துவர்கள்.