Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
குழந்தைகளுக்குகதைஏன்சொல்லவேண்டும்?
Page 1 of 1
குழந்தைகளுக்குகதைஏன்சொல்லவேண்டும்?
- கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
- அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
- குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
- அவர்களுக்கு,
வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல்,
உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி
ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது. - உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
- பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
- தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் [You must be registered and logged in to see this link.]குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
- கற்பனை
சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள்
குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை
கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். - உங்கள்
குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு
பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல
(அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை /
தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று
தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல
"எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் [You must be registered and logged in to see this image.]) - டிவி
மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன்
பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது.
கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை
அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை
கொள்ளக் கூடும். - கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம்
பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும்.
இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள்
முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள்
மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று
குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை
சொல்லுதல் அமையும்.[You must be registered and logged in to see this link.] - குழந்தைக்கு
படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால்,
அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும்
தெரிவிக்கிறார்கள். - உங்களுக்கும் குழந்தைக்குமான
நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று
குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும். - கதை
சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள்
(modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை /
நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.
================================================== =====================
அதேபோலகுழந்தைகளையும்உங்களுக்குகதைசொல்லச்சொல்லி, பொறுமையாய்கேளுங்கள்.[You must be registered and logged in to see this link.]
- அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
- தன்னம்பிக்கை வளரும்.
- உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
- creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
- குழந்தைகளை
அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி
வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக்
கொண்டுவர வழி வகுக்கும்.
உதாரணத்திற்கு, என் பெண் தன் teddy bear (பிங்கி) மற்றும் நாய்க்குட்டி
(மிட்டு) stuffed toy இரண்டையும் வைத்து ஒரு கதை சொல்லும் போது, அவள்
ஸ்கூலில் (LKG) ஒரு பையன் மற்றவர்கள் பென்சிலை தொடர்ந்து எடுத்துக்கொண்டே
வருவது தெரிந்தது. பென்சில் ஒரு ரூபாய்தான். மற்ற குழந்தைகளின்
பெற்றோருக்கு அவர்கள் தொலைத்து வருவது பிரச்சினையாகத் தெரியவில்லை அல்லது
அந்த குழந்தைகளை திட்டி விட்டு வேறு பென்சில் வாங்கி தந்து
வந்திருக்கிறார்கள் (நானும்தான்). பென்சிலை தினம் தினம் எடுத்துச்
செல்லும் குழந்தையின் பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால்,
இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அவன் attitude தவறாக மாறிவிட ஏதுவாகும்,
என்பதால், class miss-ஸிடம் இதை கவனிக்குமாறு சொல்லி விட்டேன். அவர்கள்
அக்குழந்தைக்கு தண்டனை ஏதும் தராமல், ஒரு அற்புதமான வழியில்
இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். எப்படி தெரியுமா? அவனை class leader
ஆக்கி, அனைவரது பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று தினமும் செக் பண்ணச்
சொன்னார்கள். அப்படிச் சரியாக இருந்தால், அவன் பெயர் அன்று போர்டில்
எழுதி, எல்லோரும் clap செய்வார்கள். நாளடைவில் அவன் self-esteem அதிகம்
உள்ள சிறுவனாக ஆகிவிட்டான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum