Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்
Page 1 of 1

சான்டியாகோ: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் வகை யில் ‘தடுப்பு மருந்தை’
சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இதன் சோதனை விரைவில்
நடக்கும்
என்றும் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியின் தலைநகர்
சான்டியாகோவில் சிலி பல்கலை உள்ளது. இதன் செல் டைனமிக்ஸ் மற்றும்
பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் ஜுவான் அசஞ்சோ தலைமையில் மது போதை ஒழிப்பு
தொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. வெற்றிகரமாக, மதுபோதை பழக்கத்தை
தடுக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாக குழுவினர் தற்போது
அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ஜுவான் கூறியதாவது: மதுபோதைக்கு
அடிமையாவது ஒரு நோய். மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 25 லட்சம்
பேர் இறக்கிறார்கள். மது பழக்கத்தை நிறுத்துவது சாதாரண வேலையல்ல. திடீரென
மதுவை நிறுத்தினால், உலகில் இருந்து தனித்து விடப்பட்டதுபோல, வெட்கமாக
உணர்வார்கள். அவர்களது ஆளுமைத்திறன், சமூகத்துடனான பழக்க வழக்கங்கள்
ஆகியவையும்கூட மாறிவிடும். அவர்கள் மனஉளைச்சல், மன அழுத்தத்தால்
பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, ரசாயன ரீதியாக இதை
கையாள்வதுதான் சிறந்தது என்பதால் மருந்தை உருவாக்கியுள்ளோம். மதுபோதையை
ஒழிக்க மருந்து கண்டறிந்திருப்பது உலகில் இது முதல்முறை.
மதுவை
உடலில் கலக்கச் செய்யும் ஜீனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. போதைக்கு
அடிமையானவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக்
கொண்டவர்கள் ஒரு சிப் மது அருந்தினாலே தலை கிறுகிறுக்கும், மயக்கம் வரும்,
குமட்டல், வாந்தி வரும். ஹார்ட் பீட் எகிறும். இப்படியெல்லாம் இருந்தால்
அடுத்த சிப் அருந்துவாரா? தடுப்பூசி போட்டுக்கொண்டால் 6 மாதம் முதல் ஒரு
வருடம் வரை அதன் வீரியம் இருக்கும். முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக
முடிந்துள்ளன. எலிகளை வைத்து இந்த மாதம் சோதனை நடக்க உள்ளது. மனிதர்களை
வைத்து நவம்பரில் சோதனை நடத்தப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த
பிறகு, போதை தடுப்பூசி 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் 40 ஆண்டில் டபுள் ஆன ‘தண்ணி’
அகிம்சையின்
சின்னமாக விளங்கிய மகாத்மா காந்தியடிகள், மதுவுக்கு எதிரானவர். அவர்
பிறந்த குஜராத் மண்ணில் இப்போது மது ஒழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம்,
இந்தியாவின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் உள்பட பலரும் மது பழக்கம்
உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 90 சதவீதம் பேர் மதுவிலக்கு கொள்கை
உள்ளவர்கள். வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால்,
தனிநபர் மதுநுகரும் அளவானது கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்கையும்
தாண்டிவிட்டது. ஏனென்றால், குடிப்பவர்கள் எல்லாம் மொடாக்குடியர்களாக
இருக்கிறார்கள். ஏழைகள் மொத்த செலவில் 45 சதவீதத்தை மதுவுக்கே
செலவழிக்கிறார்கள். இங்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு 85 சதவீத
காரணம் மதுவாக இருக்கிறது. எனவே, போதை பழக்கத்தை ஒழிக்கும் தடுப்பூசியை
சோதனை செய்ய சரியான இடம் இந்தியா தான் என்பதால்தான் இங்கு சோதனை நடத்த சிலி
விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவின் குளோபல்போஸ்ட்
பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
நன்றி வியப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum