Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
Page 1 of 1
முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
குளிர்காலம் வரப்போகுது.(இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுங்கிறது வேற கதை.
எப்பிடினாலும் மழை வரும், குளிரும் வரும்). இந்தமாதிரி சீதோஷ்ண நிலையில...
தும்மல், மூக்கடைப்புல தொடங்கி தலைவலி, ஜலதோஷம், சளி எல்லாம் வந்து ஒருவழி
பண்ணிரும். இதுல சிக்கி மீண்டு வர்றவங்க சிலபேரு. வேற சில பேர் என்னதான்
சிகிச்சை எடுத்தாலும் விட்டேனா பாருனு அட்டை மாதிரி ஒட்டிக்கிடும்.
இதுக்கெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்குறதோட கைவைத்தியங்கள்
செய்யுறதுனால பிரச்சினை இல்லாம வாழ்க்கையை ஓட்டலாம். இங்க நா சொல்லப்போற
வைத்தியங்கள் சில பேருக்கு பரிச்சயமானதா இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன்,
கேட்டுக்கோங்க.
:-
மழையில நனைஞ்சாலும், நனையாட்டாலும் குளிர்ச்சியான
சூழல் நிலவும்போது பலபேர் நச், நச்சுனு தும்மல் போடுவாங்க. சைனஸ்
பிரச்சினை உள்ளவங்க, அலர்ஜி உள்ளவங்களுக்கு இந்தமாதிரி தொந்தரவுகள் அதிகமா
இருக்கும். குறிப்பா காலையில கண் முழிச்சதும் அவங்க போடுற தும்மல்
மத்தவங்களை எரிச்சல் படுத்தும். இப்பிடி தும்மல் வந்தா தேங்காய்நாரை தீயில
எரிச்சு அதுல வரக்கூடிய புகையை மூக்கால சுவாசிச்சா தும்மல் நின்னுரும். இதை
அடிக்கடி செய்யக்கூடாதுங்குறதையும்இங்கே ஞாபகப்படுத்துறேன்.
:-
நொச்சி
இலையை தண்ணியில வேகவச்சி அதோட ஆவியலை மூக்கால சுவாசிக்கலாம். வேப்பிலையோட
மஞ்சள்தூள் போட்டு கொதிக் க வச்சும் ஆவி பிடிக்கலாம். இதை வேது
பிடிக்கிறதுனும் சொல்வாங்க. இந்தமாதிரி செய்றதால தும்மல் மட்டுமில்லாம
மூக்கடைப்பும், தலைவலியும்கூட சரியாகும். நொச்சி இலை, வேப்பிலை
வேதுபிடிக்கிறதையும் அடிக்கடி செய்யக்கூடாது.
:-
அடுத்ததா
மூக்கடைப்பு உள்ளவங்க மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம்.
மஞ்சள்துண்டை நல்லெண்ணையில நனைச்சி அதை தீயில எரிச்சி வர்ற
புகையைசுவாசிச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும். மூக்கு ஒழுகுனாலும் சட்டுனு
நின்னுரும். இந்தமாதிரி வைத்தியம் ஆபத்தில்லாதது, ஆனா ஒரு அளவோட செய்யும்.
பச்சக்குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுனா சாதிக்காயை தண்ணி விட்டு இழைச்சி ஒரு
கரண்டியில போட்டு சூடாக்கி பொறுக்குற சூட்டுல மூக்கு மேல பத்து போட்டீங்கனா
மூக்கொழுகல், மூக்கடைப்புநிக்கும்.
:-
அடுத்ததா ஜலதோஷம் ஆரம்பிக்கிற
மாதிரி இருந்தா உடனே சூடா வெந்நீர் குடிச்சா நிவாரணம் கிடைக்கும். இல்லைனா
மணத்தக்காளி சூப் போட்டு குடிச்சீங்கனா வந்த வழியை பார்த்து போயிரும்.
ஜலதோஷம் இருக்குறவங்களுக்கு தலையெல்லாம் வலிக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல
சுக்கை தண்ணி விட்டு உரசி நெத்தியில பத்து போட்டு வந்தா நல்ல நிவாரணம்
கிடைக்கும். காலையில இஞ்சிசாறு, டீயோட இஞ்சி சேர்த்து குடிக்கிறது, இஞ்சி
துவையல், மத்தியான வேளையில சுக்கு குழம்பு, சுக்கு மல்லி காபி
குடிக்கிறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும். தூதுவேளை துவையல், தூதுவேளை ரசம்
நல்லது. கல்யாணமுருங்கை சாறு குடிக்கிறது, கல்யாணமுருங்கை வடை, ஓமவள்ளி
& கற்பூரவள்ளி பஜ்ஜி சாப்பிடுறதுனாலயும்நிவாரணம் கிடைக்கும்.
:-
மத்தியான
சாப்பாட்டுல சின்ன வெங்காயம் - பூண்டு குழம்பு, பச்சையா உரிச்ச சின்ன
வெங்காயத்தை சாப்பிடுறது, மிளகுப்பொடியை சுடுசோத்துல முதல் கவளத்தோட
சேர்த்து சாப்பிடுறதெல்லாம் நல்லது.ஜலதோஷம் மட்டுமில்லாம சளி
தொந்தரவுகளுக்கும் இதெல்லாம் நல்லது. இந்தமாதிரி நேரங்கள்ல சுடுதண்ணியில
குளிக்கிறது, அதோட யூகலிப்டஸ் இலைகளைப்போட்டு குளிக்கிறது. நொச்சி இலைகளை
கொதிக்க வச்சி குளிக்கிறதெல்லாம் நல்ல நிவாரணி. சளி பிடிச்சா தலைக்கு
குளிக்கக்கூடாதுனு சொல்வாங்க. பிரச்சினை அதிகமா இருந்தா தவிர்க்கலாம். ஆனா
இந்த இலைக்குளியல்ல நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்பிடி குளிச்சி முடிச்ச
கையோட சாம்பிராணி புகை போடுங்க. இதை மற்ற சில மருத்துவத்தில் கூடாதுனு
சொல்வாங்க. மூக்கால சாம்பிராணி புகையை உள்ளே இழுக்கக்கூடாது. தலை,
காதுபகுதியில சாம்பிராணி புகை காட்டணும். சாம்பிராணியோட ஓமம், மஞ்சள்தூள்
சேர்த்துக்கலாம். குளிச்சிமுடிச்ச கையோட மிளகை பொடியாக்கி மெல்லிசான
துணியில போட்டு உச்சந்தலையில சூடு பறக்க தேச்சா ஜலதோஷம், சளி
பிரச்சினையெல்லாம் சரியாகும்.
:-
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி
மிளகு - பூண்டுப்பால் சாப்பிடுறதுரொம்ப நல்லது. முழு வெள்ளைப்பூண்டை
உரிச்சி பால்ல வேக வச்சி அதோட மஞ்சள்தூள், மிளகு, பனங்கல்கண்டு சேர்த்து
நல்ல கடைஞ்சி சாப்பிட்டீங்கனா சளியை விரட்டும். குழந்தைங்க, பெரியவங்க
யாரானாலும் தேங்காய் எண்ணெய்ல சூடத்தை (கற்பூரம்) போட்டு சூடு பண்ணி நெஞ்சு
பகுதியில தேய்க்கிறது, அரிசி, கோதுமைத் தவிடை வறுத்து துணியில முடிஞ்சு
நெஞ்சு, விலா பகுதியில ஒத்தடம் போடுறதெல்லாம் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல
சிகிச்சை.
:-
தமிழ்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர் (9551486617)
:-
நன்றி வெப்துனியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum