Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Go down

குழந்தைக்குத் தேவையான மருந்துகள் வீட்டில் உள்ளனவா? .

Post by Admin on Fri Feb 08, 2013 7:02 pm

துள்ளி விளையாடும் குழந்தைக் காகவென நாம் பல பொருட்களை வீட்டில் வாங்கிக்
குவிக்கிறோம். அவர்களுக்கு அழகழகான ஆடைகள், மகிழ்ந்து விளையாட விதவிதமான
விளையாட்டுப்
பொருட்கள், குளிப்பாட்ட, உணவூட்ட என வெவ்வேறான பொருட்கள்
என பிள்ளைகளின் நலன் கருதி பல செலவுகளை செய்கின்றோம். இவ்வளவு செய்யும்
நாம், குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ, கீழே விழுந்து காயப்படுத்திக் கொண்டாலோ
அவர்களுக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்களை வீட்டில் வைத்துள்ளோமா என
வினவிக் கொள்வோம். குழந்தையின் ஆடைகளுக்கு அலுமாரி, விளையாட்டுப்
பொருட்களுக்கு ஒரு பெட்டி என ஒதுக்கி வைத்திருக்கும் நாம் குழந்தைக்கு
தேவையான மருந்துகளை வேறாக ஒரு பெட்டியில் அல்லது அலுமாரியில் வைத்துள்ளோமா
என்பது கேள்விக்குறி?.
வளரும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது
இயல்பு. குழந்தைக்கு இலேசான காய்ச்சல், தலைவலி, சிறிய காயங்கள், தோல்
புண்கள், வயிற்றோட்டம் என வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கக் கூடிய நோய்
நிலைமைகள் எழலாம். இவற்றிற்கு உடனடியாக வைத்தியரை நாட வேண்டிய அவசியமில்லை.
உங்கள் வீட்டிலேயே பிள்ளையின் சிகிச்சையினை ஆரம்பிக்கலாம். குழந்தையின்
எல்லா நோய்களுக்கும் வீட்டில் சிகிச்சையளிப்பது முறையற்றது. எனினும்,
பொதுவான பாரதூரமில்லாத நோய்களுக்கு மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது
பொருத்தமானது.
இந்த மருந்துகளையும் முதலுதவிப் பொருட்களையும் ஒரு
பெட்டியிலோ அல்லது அலுமாரியிலோ அல்லது பூட்டி வைத்திருப்பது சிறந்தது.
இவ்வாறு செய்யுமிடத்து குழந்தை தவறி விழுந்தவுடன் பதற்றப்படாமல் நிதானமாக
உங்களிடமுள்ள பொருட்களை கொண்டு முதலுதவி செய்யலாம். ஒழுங்கான முறையில்
வைத்திருப்பதன் மூலம், காயம் ஏற்பட்டவுடன் பொருட்களை
தேடித்திரிவதிலிருந்தும், அரைகுறையாக பொருட்கள் கிடைப்பதிலிருந்தும்
தவிர்த்துக் கொள்ளலாம்.
பிள்ளைகளின் மருந்துப் பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை நோக்குவோம்.
*
பெரசிடமோல் உங்கள் வீட்டில் பச்சிளம் பாலகன் இருப்பின் டொரப்பர்
பெரசிடமோல் சிரப்பினை வைத்திருப்பது சிறந்தது. பெரிய பிள்ளைகள் உள்ள
வீடாயின் பெரசிடமோல் சிரப்பினையோ வில்லைகளையோ வைத்திருக்கலாம். முக்கியமான
விடயம் என்னவெனில், உங்கள் குழந்தையின் நிறையை தெரிந்திருப்பதுடன், அந்த
நிறையினடிப்படையில் தேவையான பெரசிடமோலின் அளவினையும் வைத்தியரிடம் அல்லது
மருந்துக்கடையிலுள்ளவரிடம் கேட்டறிந்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு காய்ச்சலோ, ஏதேனும் வலியோ ஏற்படுமிடத்து வழங்கலாம்.
* ஜீவனி
இது கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இன்று சந்தையில் ஓரன்ஜ் மற்றும் லெமன்
சுவையூட்டப்பட்ட ஜீவனி பக்கட்டுகளும் கிடைக்கின்றன. ஜீவனி பக்கட்டினை
களஞ்சியப்படுத்துவது மட்டுமன்றி அதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும்
என்பதனையும் கேட்டறிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைக்கு வயிற்றோட்டம்
மற்றும் வாந்தி ஏற்பட்டு குழந்தை நீரிழக்கும் தன்மை ஏற்படுமிடத்து ஜீவனி
தயாரித்து வழங்கலாம்.
* பிரிட்டன் இது வீட்டிலிருக்க வேண்டிய
மருந்தாயினும் துஷ்பிரயோகம் செய்யலாகாது. நம்மில் பலர் எடுத்ததற்கெல்லாம்
பிரிட்டன் வழங்கி குழந்தையை உறங்க வைக்கின்றனர். குழந்தைக்கு இலேசான
சளித்தன்மை, தும்மல் நிலைமைகள் உள்ள போது வயதிற்கேற்ப, ஒரு தேக்கரண்டி
அல்லது அரைத் தேக்கரண்டி வழங்குவதும் ஆபத்தல்ல.
* டிட்டோல் அல்லது
செவ்லோன் போன்ற தொற்று நீக்கிகள், இவற்றின் சிறிதளவினை இளம் சூடான நீரில்
விட்டு காயம் அல்லது உராய்வுகளை சுத்தப்படுத்தலாம்.
* தொற்றுநீக்கி கிரீம் ஒன்றினை வைத்திருப்பதன் மூலம் காயம் அல்லது உராய்வு ஏற்பட்ட இடத்தின் மீது பூசலாம்.
*
கெலமைன் லோஷன் கடைகளில் லெக்டோ கெலமைன் மற்றும் இதர கெலமைன் லோஷன்கள்
விற்கப்படுகின்றன. இதனை அதிக அரிப்பு, சொறிதல், வியர்க்குரு ஏற்பட்ட தோலின்
மேல் இட, சுகம் கிடைக்கும்.
* நெருப்பு மற்றும் சுடுகாயங்களுக்கு
பூசும் கிரீம் ஒன்றினை மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி வைத்திருப்பது,
தற்செயலாக குழுந்தையின் மீது ஏதும் சூடுபட்டால் உடனடியாக பூச உதவும்.
*
வேபர் ரப் அதாவது விக்ஸ் வேபர் ரப் போன்ற ஒன்றினை வைத்திருப்பது
குழந்தைக்கு சளித்தொற்று, மூக்கடைப்பு காணப்படும் போது குழந்தையின்
நெஞ்சில் தடவி விட குழந்தைக்கு மூச்சு விடுவது இலகுவாகும்.
* நெப்பி
ராஷ் கிரீம் சந்தையில் பல வகையான நெப்பி ராஷ் கிரீம்கள் காணப்படுகின்றன.
உங்கள் குழுந்தை டயபர் அணியும் வயதெல்லையில் இருப்பின், நெப்பி ராஷ் கிரீம்
வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது.
* கிரைப் வாடர் இது சிறு குழந்தைகளில் எழும் கொலிக் எனும் வயிற்றுவலி தன்மையினை இலேசாக்கி விடும்.
மருந்துப் பெட்டியில் தேவையான பின்வரும் பொருட்களை வைத்திருப்பது அவசியம்
*
வெப்பமாணி அல்லது தெர்மோமீற்றர் நல்லதொரு உடல் வெப்ப மானியினை
வைத்திருப்பது மட்டுமன்றி, அதனை எவ்வாறு வாசிப்பது எந்தளவிற்கு மீறினால்
காய்ச்சல் என்பதனையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
* அளவு குறிக்கப்பட்ட மருந்து குடிக்கும் கரண்டி அல்லது குவளை.
* பஞ்சு காயங்களை சுத்தப்படுத்த தேவைப்படும்.
* கோஸ் (gauze) டிரெஸிங் இது காயமேதும் ஏற்பட்டால் மருந்திட்டு கட்ட உதவும்.
*
கிரேப் பென்டேஜ் 3 அகலமான கிரேப் பென்டேஜ்களை வைத்திருப்பது பொருத்தம்.
மருந்திட்டு கட்டிய காயங்களின் டிரசிங்கினை உரிய இடத்தில் வைத்திருக்க
உதவும்.
* பிளாஸ்டர் வெவ்வேறு அளவுகளில் வைத்திருப்பது நல்லது.
* அய் பேட் கண்களில் ஏதும் வருத்தம் அல்லது நமைச்சல் உள்ள போது கண்களை தூய நீரினால் கழுவி அய்பேட்டினை வைத்திவிடலாம்.
* கத்திரிக்கோல்.
* கையுறைகள்.
கவனிக்க வேண்டிய விடயங்கள் சில...
* மருந்துகள் குழந்தைக்காயினும் அவற்றினை குழந்தைகளுக்கு எட்டாத விதத்தில் வைத்திருக்க வேண்டும்.
* மருந்துப் பெட்டியினை அல்லது அலுமாரியினை பூட்டி வைப்பது நல்லது.
* மருந்துகளை அவற்றிற்குரிய பெட்டிகளில், லேபல்களை கழட்டாது வைத்திருங்கள்.
* வீட்டில் வைத்துள்ள மருந்துகளின் குழந்தைக்கு வழங்க வேண்டிய உரிய, சரியான அளவினை அறிந்து வைத்திருங்கள்.
*
அடிக்கடி, அதாவது குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையேனும் மருந்துப்
பெட்டியிலுள்ள பொருட்களை மீள்பரிசோதனை செய்து, காலாவதியான மருந்துகளை
அகற்றி, குறைந்துள்ள பொருட்களை மீள் நிரப்புங்கள்.
வீட்டினை அழகுபடுத்த,
மெருகூட்ட பாடாய்ப்படுகிறோம். வீட்டின் அழகில் அக்கறையுள்ள நாம்,
குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனமெடுத்து, வீட்டில் ஒரு பாதுகாப்பான
பகுதியில், குழந்தைகளுக்கென மருந்துப் பெட்டியினையோ அல்லது மருந்து
அலுமாரியொன்றினையோ ஒழுங்காக வைத்திருப்போம்.

நன்றி:ரகுதர்ஷன்

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.]

Under Creative Commons License: [You must be registered and logged in to see this link.]

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum