குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகள் அழகாக இருக்க

Go down

குழந்தைகள் அழகாக இருக்க Empty குழந்தைகள் அழகாக இருக்க

Post by Admin Thu Feb 28, 2013 11:16 pm




குழந்தைகள் ஒரு தேவதை போன்றவர்கள். அதனால் தான்
அனைத்த குழந்தைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். ஆனால் இந்த நவீன
உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான்
அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க
வேண்டியது அவசியமாகிறது. சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக
பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு எந்த ஒரு வலியும்
இருக்கக்கூடாது, ஏன் அவர்களை அழுத்திப் பிடிக்கக் கூட விட மாட்டார்கள்.
அவ்வாறெல்லாம் இருக்க வேண்டியது தான். ஆனால் அவை குழந்தைகளின்
பழக்கவழக்கங்களை மாற்றிவிடும். எனவே தான், பெற்றோர்கள் குழந்தைகளின்
சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது
குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால்,
பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த
மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும்
டயப்பரை அணிவிக்க வேண்டும். இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து
பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.


[You must be registered and logged in to see this image.]

1.நகங்களை வெட்டுதல் : குழந்தைகளின் கால்கள் மற்றும்
கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால்
கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும்
கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

2. பற்களை சுத்தமாக வைத்தல் : குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்
போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை
பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு 'பேபி மௌத்
வாஷ்' கூட பயன்படுத்தலாம்.

3.ஹேர் ஸ்டைல் : குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று
இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று
வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி
விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

4.குளிக்க வைத்தல் : குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை
குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின்
ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு
மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

5. நாற்றமின்றி இருக்க... குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது
என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே
அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி
பவுடரை போட்டு விட வேண்டும்.

6. உடைகள் : குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய
உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே
அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

7.கூந்தல் : குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு
தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால்
அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

8.துணி : குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல்,
துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும்
அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

9.மென்மையான சருமம் : குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால்
மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு
தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

10.ஷூ : குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு
ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும்
தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

10.பிறந்தநாள் உடை : குழந்தைகளை ஆடையில்லாமல் இருக்க விட வேண்டாம். பின் இது அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கமாகிவிடும்.

11.டயப்பர் : குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே
செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி
யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum